Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வந்தது இழுபறி: மபியில் ஆட்சி அமைக்க காங்.க்கு அழைப்பு

மத்திய பிரதேசம்
Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (10:56 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துவிட்டது. ஆனால் மத்திய பிரதேசத்தில் இழுபறியாக இருந்து வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 114 தொகுதிகளும், பாஜகவுக்கு 109 தொகுதிகளும் கிடைத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 116 தொகுதிகள் தேவை. இந்த நிலையில் முன்று சுயேட்சைகளும், மாயாவதி கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளதால் அங்கு காங்கிரஸ் கட்சி அமைக்கின்றது.

சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி மத்திய பிரதேச கவர்னர், காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து இம்மாநிலத்தில் நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய மூவரில் ஒருவர் முதல்வர் பதவியை ஏற்பார்கள் என்று தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments