ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், எதிர்கட்சிகள் வழங்கிய இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பெரும்பான்மை இல்லை என்றும் விளம்பரம் தேடும் நோக்கத்திற்காக உண்மைக்கு மாறான தகவல்கள் இந்த தீர்மானத்தில் இடம்பெற்றிருந்தால், தள்ளுபடி செய்யப்படுவதாகவும் ராஜ்யசபா துணை தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் இதுவரை மக்களவையில் தான் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், முதல் முறையாக ராஜ்யசபாவில் ராஜ்யசபா தலைவரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வந்த நிலையில், இந்த தீர்மானம் வெற்றி பெற வேண்டுமானால் 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்பிக்கள் ஓட்டுகளை பெற வேண்டும். ஆனால் ராஜ்யசபாவில் அந்த அளவுக்கு எம்பிக்கள் எண்ணிக்கை இல்லாததால், இந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்படுவதாக ராஜ்யசபா துணை தலைவர் தெரிவித்தார்.
ராஜ்யசபா தலைவர் பதவி மட்டுமின்றி, துணை ஜனாதிபதியாக இருக்கும் ஒருவரின் உயரிய பதவியின் நேர்மைக்கும் நிலைத்தன்மைக்கான குந்தகம் ஏற்படுத்த இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக பாஜக எம்பிக்கள் குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.