Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலத்தினை திறந்து வைத்த மோடி

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (15:48 IST)
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் நகரின் அருகே பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 4.94 கிலோ மீட்டர் நீளத்துக்கு போகியில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இவை கடந்த 1997-ஆம் ஆணடு தேவகவுடா பிரதமராக இருந்தபோதே திட்டமிடப்பட்டு, 2002-ஆம் ஆண்டு வாஜ்பாய்  பிரதமராக இருந்தபோது பாலம் கட்டும் பணிகள் துவங்கின.
 
கிட்டதட்ட 15 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் தற்போது முடியுற்ற நிலையில், கடந்த 3-ஆம் தேதி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக  நடத்தப்பட்டது. இந்நிலையில் வாஜ்பாயின் பிறந்த நாளான இன்று (டிசம்பர் 25), பாலத்தினை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
 
சுமார் 5 ஆயிரத்து 960 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டள்ளது. 2 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள போகிபீல் பாலத்தின் கீழடுக்கில்  இருவழி ரயில்பாதையும், மேலடுக்கில் 3 வழிச்சாலைகளும் அமைந்துள்ளன.
 
தின்சுகியாவில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் நாஹர்லகுன் இடத்திற்கு செல்ல முதலில் 15 முதல் 20 மணி நேரங்கள் ஆகும். தற்போது  இந்த போகிபில் பாலம் மூலம் வெறும் ஐந்து மணிநேரத்தில் செல்லலாம் என்பது அனைவராலும் வரவேற்கத்தக்கது. இப்பாலம் ஆசியாவின்  இரண்டாவது மிகப் பெரிய பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments