Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநில பாஜக வினரோடு வீடியோ கான்பரன்ஸில் மோடி – புது வியூகம் !

மாநில பாஜக வினரோடு வீடியோ கான்பரன்ஸில் மோடி – புது வியூகம் !
, வியாழன், 20 டிசம்பர் 2018 (08:09 IST)
5 மாநிலத் தேர்தல்களின் முடிவு பாஜக வில் பயஙகரமான பயத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற புது வியூகத்தை அமைத்துள்ளது.

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் பாஜக பயங்கரமாக அப்செட்டில் இருக்கிறது. தன்னுடையக் கோட்டையாக இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கூட ஆட்சியை இழந்துள்ளது. இந்த தேர்தல்களில் மோடி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டும் அடைந்த இந்த தோல்வி மோடிக்கு மக்கள் மத்தியில் இருந்த கவர்ச்சி ஓய்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மோடி அலை ஓய்ந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடிக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. இந்த பட்டியலில் நிதின் கட்கரி, யோகி ஆதித்யநாத் போன்றோரின் பெயரும் அடிபட்டு வருகிறது.

இதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தனது புகழை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மோடிக்கு முன் உள்ளது. அதனால் தேர்தலில் வெற்றிபெற புது வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறார். பாஜக வலுவாக இல்லாத மாநிலங்களில் பாஜக நிர்வாகிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்தித்து உரையாடி வருகிறார். சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் பாஜக நிர்வாகிகளையும் இதேப்போல சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார். களத்தில் மக்களோடு இணைந்து பணியாற்றவும் களப்பணி செய்யவும் அறிவுரைக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளாஸ்டிக் தடை - இன்று முதல் கடைகளில் நோ ஸ்டாக் !