வினேஷ் போகத்துக்கு வாழ்த்து சொல்லாத மோடி? என்ன காரணம்? - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!

Prasanth Karthick
புதன், 7 ஆகஸ்ட் 2024 (09:15 IST)

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இறுதி போட்டிக்கு சென்றுள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து சொல்லாதது ஏன் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.

 

 

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக்ஸில் முதன்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதனால் வினேஷ் போகத்தை வாழ்த்தி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

ஆனால் இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இதுவரை வினேஷ் போகத்தை வாழ்த்தி எந்த பதிவும் இடவில்லை. ஆனால் இதே ஒலிம்பிக்ஸில் மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றபோது அவரை வாழ்த்தி உடனே பிரதமர் மோடி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

ALSO READ: தங்கத்தை தவறவிட்ட இந்திய ஹாக்கி அணி! வெண்கல பதக்கமாவது கிடைக்குமா?
 

முன்னதாக வினேஷ் போகத் இந்திய மல்யுத்த சம்மௌனத்தின் தலைவராக இருந்த பாஜக பிரபலம் மீது பாலியல் புகார்கள் அளித்ததோடு, தலைவர் பொறுப்பில் உள்ளவரை மாற்ற வேண்டும் என சக மல்யுத்த வீரர்களோடு சுமார் 40 நாட்களாக போராட்டமும் நடத்தி வந்தார். இந்த சம்பவத்தால்தான் பிரதமர் மோடி, வினேஷ் போகத்தை வாழ்த்தாமல் மௌனம் காக்கிறாரா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக ட்விட்டரில் #Shameless என்ற ஹேஷ்டேகையில் சிலர் ட்ரெண்ட் செய்து வினேஷ் போகத்திற்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்.

 

ஆனால் பாஜக தரப்பில் சிலர் பேசும்போது, மனு பாக்கர் வெண்கலம் வென்றபோதுதான் பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அதுபோல வினேஷ் போகத்தும் பதக்கம் வெல்லும்போது அவர் வாழ்த்து தெரிவிக்கலாம். இது இயல்பான ஒன்றுதான். பிரதமர் எந்த பாகுபாடும் பார்க்கவில்லை என்று கூறி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்ஐஆர் விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்.. மீண்டும் தேதி நீட்டிக்கப்படுமா?

ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைத்தார் ஓபிஎஸ்.. அமித்ஷா வருகை காரணமா?

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

அடுத்த கட்டுரையில்