Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்ஜை திறந்த 5 வயது சிறுமி உயிரிழந்த பரிதாபம்.. சென்னையில் சோக சம்பவம்!

Siva
புதன், 7 ஆகஸ்ட் 2024 (08:13 IST)
சென்னையில் ஐந்து வயது சிறுமி பிரிட்ஜை திறந்தபோது ஷாக் அடித்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பிரிட்ஜில் தின்பண்டம் எடுப்பதற்காக திறந்ததாகவும் அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த சிறுமி மீது மின்சாரம் பாய்ந்ததாகவும் தெரிகிறது.

இதனை எடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து சிறுமி இறந்து விட்டதாக கூறியதை அடுத்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரூபாவதி என்ற 5 வயது சிறுமி பிரிட்ஜை திறந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் பிரிட்ஜின் கைப்பிடியில் மின்சாரம் பாய்ந்ததால் தான் சிறுமி இறந்ததாக கூறப்படுகிறது.  இது குறித்து எலக்ட்ரிசியன்கள் கூறியபோது ஃப்ரிட்ஜை அவ்வப்போது சர்வீஸ் பார்க்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால்  இது மாதிரியான சோக நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

போரை நிறுத்தாவிட்டால் 100% வரி.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. புடின் பதில் என்ன?

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments