ஹரியானா மாடல் அழகியின் கொலையில் திடீர் திருப்பம்.. கைதான காதலரின் அதிர்ச்சி வாக்குமூலம்..!

Siva
செவ்வாய், 17 ஜூன் 2025 (11:41 IST)
காணாமல் போன ஒரு மாடல் அழகியின்  உடல் ஹரியானாவில் உள்ள ஒரு கால்வாயில் இருந்து கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவரது காதலனை குற்றப் புலனாய்வுப் பிரிவு  கைது செய்துள்ளது.
 
கைதான காதலன் பெயர் சுனில் என்றும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஷீத்தலை கத்தியால் குத்திக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் தெரிகிறது.
 
. சோனிபட்டில் உள்ள கார்கோடா அருகே ஷீத்தலின் காரை கால்வாயில் தள்ளிவிட்டு, விபத்து போல நாடகமாடி விசாரணையை திசை திருப்ப முயன்றதாக ஹரியானா மூத்த காவல் அதிகாரி சதீஷ் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.
 
"குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தி கொன்று, பின்னர் காரை கால்வாயில் தள்ளி விபத்து போல காட்டியுள்ளா. சுனில் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை ஷீத்தல் சமீபத்தில் அறிந்ததால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
 
ஹரியானா இசைத் துறையில் பணிபுரிந்த ஷீத்தல், ஜூன் 14 அன்று காணாமல் போனார். இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மாட்லாவுடா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தனர். ஷீத்தல் சுனிலுடன் காரில் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இந்த நிலையில் சுனில் அன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். கொலையில் பயன்படுத்தப்பட்ட கத்தியை மீட்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா சி.வி. சண்முகம்? என்ன காரணம்?

அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments