Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவை அடுத்து மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (20:01 IST)
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. மாநில சுகாதார அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம் வைரஸிலிருந்து பொது மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸ் என்பது பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட பிரபலங்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் தற்போது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் தற்போது சோதனை மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக கூட்டணியும் புறக்கணிப்பு..!

சிந்து நதியில் தங்கம் புதைந்து கிடக்கின்றதா? தோண்டி எடுக்க குவியும் மக்களால் பரபரப்பு..!

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்: சீமான்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

கனடா பிரதமர் பதவி.. பின்வாங்கினார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

அடுத்த கட்டுரையில்
Show comments