Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால், தயிர், காய்கறி, மது, வாகனங்கள் விலை திடீர் உயர்வு.. இலவச திட்டங்கள் காரணமா?

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (09:09 IST)
கர்நாடக மாநிலத்தில் அத்தியாவசிய பொருள்களான பால் தயிர் காய்கறி மற்றும் மது வாகனங்கள் விலை உயர்ந்துள்ளதாகவும் இதற்கு அரசின் இலவச திட்டங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. 
 
கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனை அடுத்து இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000, பட்டதாரிகளுக்கு ரூபாய் 3000, டிப்ளமா படித்தவர்களுக்கு ரூபாய் 1500, இலவச மின்சாரம், மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் காரணமாக ஆண்டுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிகிறது. 
 
இதனால் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கர்நாடக அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை சுமார் 30 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாமல் கர்நாடக அரசு திண்டாடி வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கர்நாடக பால் கூட்டமைப்பு பாலின் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகரித்து உள்ளது. இதனால் டீக்கடைகளில் டீ காபி ன் விலை ஐந்து ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
 அதேபோல் மது வகைகளின்  விலையும் உயர்ந்துள்ளதாகவும், வாகனங்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட வரி 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments