Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மத்ஸ்யா 6000’ : கடலடி ஆய்வு செய்ய இந்தியா திட்டம்!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (12:59 IST)
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில்,  சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமான சந்திரனில் தரையிறக்கியது.

இதையடுத்து, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா திட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், இந்த திட்டத்தின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

பூமியை 4 சுற்றுவட்டப்பாதைகளில் சுற்றி விரிவடைந்து சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான எல்-1 பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.

இதற்கான சுற்றுவட்டப்பாதை உயர்த்துதலில் 4வது சுற்றுவட்டப்பாதைக்கு ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.

இந்த  நிலையில் சந்திரயான்3, ஆதித்யா எல்1 ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து,  கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக, இந்தியா ‘மத்ஸ்யா6000’ என்ற நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தை  சுமார் 6 கிலோ மீட்டர் ஆழத்திற்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த வாகனத்தில் 3 ஆய்வாளர்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த மத்ஸ்யா 6000 வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில் நுட்ப நிறுவனம் ( என்ஐஓடி ) வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments