Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை பலாத்காரம் செய்து கருத்தடை மாத்திரை கொடுத்த கணக்கு டீச்சர்!

மாணவியை பலாத்காரம் செய்து கருத்தடை மாத்திரை கொடுத்த கணக்கு டீச்சர்!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2016 (15:32 IST)
பெங்களூரில் 28 வயதான கணித ஆசிரியர் ஒருவர் அந்த பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவருக்கு கருத்தடை மாத்திரை வழங்கிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.


 
 
பெங்களூர் இல்யாஸ் நகரை சேர்ந்தவர் அருண் பாஷா. தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்த அவர் அதே பள்ளியில் படிக்கும் 16 வயதான 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
 
இதனையடுத்து அந்த மாணவியை பள்ளிக்கு வெளியே சந்தித்த ஆசிரியர் அருண் பாஷா அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பின்னர் மாணவியை அடிக்கடி பள்ளிக்கு வெளியே சந்தித்து வினாத்தாள்களை வழங்கி மாணவியிடம் நல்ல பெயர் எடுத்துள்ளார்.
 
இந்நிலையில் ஒருநாள் மாணவியை தனியார் ஹோட்டலுக்கு ஆசிரியர் அருண் பாஷா அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருத்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்த பின்னர் மாணவிக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை மாத்திரை கொடுத்துள்ளார்.
 
பின்னர் மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூற அவர்கள் உடனடியாக போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியர் அருண் பாஷாவை கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்