மணிப்பூர் விவகாரம் காரணமாக பாஜக கூட்டணியிலிருந்து முக்கிய கட்சி வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
இந்த நிலையில் மணிப்பூரில் முதலமைச்சர் பைரன்சிங் அரசு வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டியுள்ள குக்கி மக்கள் கட்சி அந்த அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த முதலமைச்சர் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இனி மேலும் இந்த அரசுக்கு ஆதரவாளிப்பது சரியாக இருக்காது என்ற முடிவு செய்ததால் ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்றும் குக்கி மக்கள் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த கட்சிக்கு மணிப்பூரில் இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது குற்றமில்லை