Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா குணமாகும் என மண்ணெண்ணெய் குடித்தவர் பரிதாப பலி!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (11:55 IST)
மண்ணெண்ணெய் குடித்தால் கொரோனா நோய் குணமாகும் என நினைத்து மண்ணெண்ணையை குடித்து பரிதாபமாக ஒருவர் பலியான சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த போபால் என்ற பகுதியை சேர்ந்தவர் மகேந்திரா. இவருக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதனை அடுத்து அவர் கடந்த 5 நாட்களாக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் தீரவில்லை. இதனை அடுத்து அவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என நினைத்து பயந்தார்.
 
இந்த நிலையில் மண்ணெண்ணெய் குடித்தால் கொரோனா வைரஸ் நோய் குணமாகும் என்று நம்பிய மகேந்திரா அதை எடுத்து கடகடவென குடித்தார். இதனையடுத்து அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் 
 
இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இல்லை என்றும் சாதாரண காய்ச்சல் தான் என்றும் கொரோனா இருப்பதாக பயந்துகொண்டு அவர் மண்ணெண்ணெய் குடித்து உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

முதலாளியுடன் மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. 2026 தேர்தலுக்கு ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments