Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணை மறைத்த காமம்: பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை!

கண்ணை மறைத்த காமம்: பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (14:02 IST)
டெல்லியில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் டெல்லியில் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. தற்போது மகளை தந்தை பலாத்காரம் செய்த வக்கிர சம்பவமும் நடந்துள்ளது.


 
 
டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார் பாதிக்கப்பட்ட சிறுமி. இவரது தாய் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தை அந்த சிறுமியை கட்டிப்போட்டு வாயில் துணியை வைத்து அடைத்து பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.
 
பின்னர் இது பற்றி வெளியில் சொன்னால் சிறுமியையும், அவரது தாயையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் வெளியில் சொல்ல முடியாமல் மனதில் புழுங்கி வந்த சிறுமியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை வீட்டில் யாரும் இல்லாததால் மீண்டும் சிறுமையை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார் அவரது தந்தை. இதனால் மனமுடைந்த சிறுமி தனது பள்ளி ஆசிரியரிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார்.
 
மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து அந்த காமுக தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

அடுத்த கட்டுரையில்