Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனுக்காக குழந்தையை விற்ற தந்தை - ஒடிசாவில் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (10:39 IST)
தனது ஆண் குழந்தையை விற்று அதில் செல்போன் வாங்கிய தந்தை பற்றிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஓடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பலராம் முகி. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அந்நிலையில், கடந்த வருடம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 


 

 
இந்நிலையில், கையில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட பலராம்,  அந்த ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரிடம் விற்றுள்ளார். அதோடு, அந்த பணத்தில் செல்போன், பெண் குழந்தைக்கு கொலுசு மற்றும் மனைவிக்கு புடவை ஆகியவை வாங்கியுள்ளார்.
 
இந்த விவகாரம் எப்படியோ வெளியே கசிய, அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில், சோம்நாத் சேதி என்பவரிடம் பலராம் தனது குழந்தையை விற்றுள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
 
சோம்நாத்திடம் நடத்திய விசாரணையில், அவரின் 24 வயது மகன் 2012ம் ஆண்டு இறந்து விட்டதால், தனது மனைவியின் வேதனையை போக்க, பலராமிடம் பணம் கொடுத்து அந்த குழந்தையை வாங்கியதாக அவர் கூறினார்.
 
இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :62 வயது முதியவர் போக்ஸோவில் கைது!

அவர் இல்லைன்னா உயிரே போயிருக்கும்! காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை அழைத்து நன்றி சொன்ன சயிஃப் அலிகான்!

சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள்! - திருப்பரங்குன்றத்தில் தொடரும் மத பிரச்சினை!

பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்.. நிதிஷ் குமார் கட்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments