Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஞாபகம் இருக்கிறதா? - இப்போது இவர் லட்சாதிபதி

Advertiesment
ஞாபகம் இருக்கிறதா? - இப்போது இவர் லட்சாதிபதி
, செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (17:55 IST)
இறந்து போன தனது மனைவியுன் உடலை எடுத்து செல்ல பண வசதியில்லாமல், தன்னுடைய தோளில் உடலை தூக்கி சென்ற இந்த நபர் தற்போது லட்சாதிபதியாக மாறியுள்ளார்.


 

 
ஒடிசா மாநிலம், காளஹண்டி மாவட்டத்தில், மிகவும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்தவர் டானா மஜ்ஹய். இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர்.
 
கடந்த வருடம் ஆக்ஸ்டு மாதம், அவரின் மனைவி அம்மாவட்டதில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாமல், மரணமடைந்தார். அவரின் உடலை, மருத்துவமனையில் இருந்து 60 கிலோமீட்டர்  தொலைவில் இருக்கும் அவரின் கிராமத்திற்கு எடுத்துச்செல்ல, மருத்துவமனையின் தரப்பில் உதவி செய்யவில்லை. 
 
மனைவியின் உடலை மருத்துவமனையில் இருந்து, கிராமத்திற்கு எடுத்து செல்ல வாகனத்திற்கு பணம் இல்லாததால், அவர், தன் மகளுடன், மனைவியின் உடலை தூக்கிக் கொண்டு, நடந்தே தன்கிராமத்திற்கு புறப்பட்டு சென்றார். 

webdunia

 

 
இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, அவருக்கு உதவ முன்வந்த பஹ்ரைன் இளவரசர் கலீபா, ரூ.9 லட்சத்திற்கான காசோலையை அவருக்கு அனுப்பிவைத்தார். அதோடு, இந்தியா மட்டுமில்லாமல், உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் அவருக்கு பண உதவிகள் குவிந்தது. இதனால், அவர் தற்போது லட்சாதிபதியாக மாறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கள் மொத்தம் 40 பேர்; ஓபன் செய்த தங்க தமிழ்செல்வன்