Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிர்வாணமாக காதலன்; காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை! – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
நிர்வாணமாக காதலன்; காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை! – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!
, செவ்வாய், 28 மார்ச் 2023 (10:44 IST)
மகாராஷ்டிராவில் காதலனை நிர்வாணமாக்கி, காதலி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் விரார் மலை என்ற பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் அருகே மாலை நேரத்தில் காதல் ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக மது அருந்த சென்ற இருவர் அவர்களை கவனித்துள்ளனர். தனிமையில் இருந்த காதல் ஜோடிகளை செல்போனில் படம்பிடித்த அவர்கள் அதை காட்டி காதல் ஜோடிகளை மிரட்ட தொடங்கியுள்ளனர்.

அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிராமல் இருக்க பணம் கேட்டுள்ளனர். அந்த காதலர் தனது நண்பனிடம் பணம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தபோதே அந்த நபர்கள் இளம்பெண்ணிடம் அத்துமீறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காதலன் அங்கு கிடந்த பீர் பாட்டிலை கொண்டு ஒரு நபரை தாக்கியுள்ளார். ஆனால் சுதாரித்த அவர்கள் காதலனை பிடித்து நிர்வாணமாக்கி ஒரு மரத்தில் கட்டுப்போட்டுள்ளனர்.

பின்னர் காதலியை மறைவாக இழுத்து சென்ற அவர்கள் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்து இளம்பெண் வீட்டுக்கு ஓடியுள்ளார். எப்படியோ கட்டுக்களை அவிழ்த்த காதலன் அப்பகுதி மக்களிடம் நடந்ததை சொல்லி உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் நிர்வாணமாக திரிந்ததால் பலரும் ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியாக வந்த போலீஸார் இளைஞரை பிடித்து விசாரிக்க உண்மை தெரிய வந்துள்ளது.

பின்னர் தீவிர விசாரணை மேற்கொண்டு வன்கொடுமை செய்த இருவரையும் கைது செய்த போலீஸார். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10,12ஆம் வகுப்பு மாணவர்களின் தகவல் விற்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!