Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வருடம் மட்டுமே பாடக்குறைப்பு: சிபிஎஸ்இ விளக்கம்

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (08:05 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த கல்வி ஆண்டு மிகவும் குறுகிய காலமாக இருக்கும் என்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 30 சதவீதம் குறைப்பு என மத்திய அரசு முடிவு செய்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த பாடக்குறைப்பு இந்த ஆண்டு மட்டுமா அல்லது வரும் ஆண்டுகளில் தொடருமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்தது. இதனை அடுத்து சிபிஎஸ்இ அளித்துள்ள விளக்கத்தில் 9 முதல் 12 வகுப்புகளுக்கான பாடங்கள் 30% குறைப்பது என்ற முடிவு 2020-21 கல்வி ஆண்டு மட்டுமே பொருந்தும் என்றும் மற்ற ஆண்டுகளுக்கு பொருந்தாது என்றும் அறிவித்துள்ளது
 
இந்த கல்வி ஆண்டின் மாதங்கள் மிகவும் குறைவு என்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இந்த ஆண்டுக்கு மட்டுமே இந்த பாடக்குறைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது
 
மேலும் குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்தவிதமான கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்றும் என்சிஇஆர்டி முன்மொழிந்துள்ள மாற்றுக் கல்வி நாட்காட்டி திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகம் தீர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments