Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரியான ‘வாபஸ்’ பழனிசாமி: முக ஸ்டாலின் கிண்டல்

Advertiesment
சரியான ‘வாபஸ்’ பழனிசாமி: முக ஸ்டாலின் கிண்டல்
, திங்கள், 6 ஜூலை 2020 (13:14 IST)
11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்பட்டு, பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த புதிய முறைப்படி 5 பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால் இந்த முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பழைய திட்டமே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
புதிய பாடத்திட்டம் வாபஸ் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘குளறுபடியானது - ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது! மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? என்று பதிவு செய்துள்ளார். மேலும் முதல்வரை ‘சரியான ‘வாபஸ்’ பழனிசாமி! என்றும் கிண்டலடித்துள்ளளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிட் ரேன்ஜ் போனாக வந்திறங்கிய Moto One Fusion !!