Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லாலுவின் உடல்நிலை மோசம் – 37 சதவீதம் மட்டுமே இயங்கும் சிறுநீரகம் !

லாலுவின் உடல்நிலை மோசம் – 37 சதவீதம் மட்டுமே இயங்கும் சிறுநீரகம் !
, ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (13:38 IST)
பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பீஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தீவன ஊழல் வழக்கில் சிக்கி 27 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். சிறையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் ராஞ்சி மருத்துவமன, எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கடந்த ஓராண்டாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்கள் உள்ளன. தற்போது ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவரது உடல்நிலை மோசமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லாலுவின் சிறுநீரகம் 67 சதவீதம் செயலற்றுவிட்டதாகவும் 37 சதவீதம் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனிதத் தவறுகளால்தான் பொருளாதார மந்தநிலை – மன்மோகன் சிங் விமர்சனம் !