Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆயிரம் வேலைக்கு 9.5 லட்சம் விண்ணப்பங்கள்! – அக்னிபாத் கடற்படை பணி!

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (10:50 IST)
மத்திய அரசின் அக்னிபாத் ராணுவத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிகளில் சேர 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தின் கடற்படை, விமானப்படை மற்றும் காலாட்படையில் 4 ஆண்டுகள் தற்காலிக ராணுவ பணிகளை மேற்கொள்ளும் அக்னிபாத் ராணுவ பணி திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தை எதிர்த்து முதலில் நாடு முழுவதும் பல பகுதிகளில் கலவரங்கள் நடந்தன. எனினும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெற தொடங்கப்பட்ட நிலையில் பலரும் ஆர்வமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர்.

இந்திய ராணுவத்தின் கப்பற்படையில் அக்னிபாத் திட்டத்தில் சேர ஜூலை 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு சமீபத்தில் முடிவடைந்தது. கடற்படையில் மொத்தம் 3 ஆயிரம் பணியிடங்கள் உள்ள நிலையில், இந்த பணியிடங்களுக்காக 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 82,500 பேர் பெண்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments