Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை தரிசனத்திற்கு 8.75 லட்சம் பேர் முன்பதிவு! – களைகட்டும் யாத்திரை!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (09:46 IST)
சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி பலரும் வந்து செல்கின்றனர்.

தற்போது மண்டலபூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வரை 3,84,106 பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்துள்ளனர். இதுதவிர ஏராளமான பக்தர்கள் நேரடி முன்பதிவு மூலமாகவும் தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் நவம்பர் 30 வரை சபரிமலை தரிசனத்திற்கு 8.79 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நேரடி முன்பதிவுகளையும் சேர்த்தால் இந்த மாத இறுதிக்கும் சுமார் 10 லட்சம் ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments