Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம்: கர்நாடகா முன்னாள் முதல்வர் அறிவிப்பு..!

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (09:06 IST)
பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் எதிர்கட்சிகள் கூட்டம் பெங்களூரில் நடந்த நிலையில் அந்த கூட்டத்திற்கு குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் டெல்லியில் பாஜக கூட்டணி கூட்டம் நடந்தபோதும் அதிலும் குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை 
 
இரண்டு கூட்டணிகளும் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை குமாரசாமி அதிருப்தியுடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கர்நாடக மாநிலத்தின் நலன் கருதி பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 
 
மேலும் கூட்டணி குறித்து முடிவெடுக்க தனது தந்தை தேவகவுடா தனக்கு முழு அதிகாரம் வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்துவேன்: டிரம்பின் வீடியோ வைரல்...!

நடிகை கஸ்தூரி மீது மேலும் 2 வழக்குகள்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

தென் மாவட்டத்தில் போட்டி.. கட்சியில் பிக்பாஸ் பிரபலங்கள்.. சீமானின் மெகா திட்டம்..!

திருச்சி சூர்யாவுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: நீதிமன்றத்தில் அரசுதரப்பு பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments