Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500, 1000 ரூபாய் தடையில் மூளை வேலை செய்யாத மத்திய அரசு: கொல்கத்தா நீதிமன்றம் சாடல்!

500, 1000 ரூபாய் தடையில் மூளை வேலை செய்யாத மத்திய அரசு: கொல்கத்தா நீதிமன்றம் சாடல்!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (15:57 IST)
500, 1000 ரூபாயை தடை செய்த மத்திய அரசு அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. இவற்றை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசின் மூளை சரியாக வேலை செய்யவில்லை என கொல்கத்தா நீதிமன்றம் சாடியுள்ளது.


 
 
கடந்த 8-ஆம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து பழைய நோட்டுகளை மாற்றவும், வங்கிகளில் பணம் எடுக்கவும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொது மக்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த ரூபாய் நோட் தடைக்கு எதிராக கொல்கத்தா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று வந்தது. இதில் கருத்து சொல்லிய நீதிபதிகள், ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை முறையாக அமல்படுத்துவதில் மத்திய அரசின் மூளை சரியாக வேலை செய்யவில்லை என சாடியுள்ளனர்.
 
மேலும், நாள்தோறும் விதிமுறைகளை மாற்றிக்கொண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வங்கியில் பணம் மாற்றம் செல்ல பொதுமக்களிடம் வங்கி ஊழியர்கள் பொறுப்பின்றி நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விஷயத்தில் அரசின் கொள்கையில் மாற்றம் கொண்டுவர நீதிமன்றத்தால் முடியாது என நீதிபதிகள் கூறினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments