Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி மெட்ரோ ரயிலிலும் “வெட்டிங் போட்டோகிராபி” – கொச்சி மெட்ரோ அறிவிப்பு!

Advertiesment
Kochi Metro
, வெள்ளி, 20 மே 2022 (17:11 IST)
கேரளாவில் கொச்சி மெட்ரோ ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் “வெட்டிங் போட்டோகிராபி” எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் என்றாலே சடங்கு, சம்பிரதாயங்கள், திருமண மண்டபம், டெக்கரேசன் வேலை என ஏகமான செலவுகள் கொண்டதாக இருக்கிறது. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் என்றாலே மேலே சொல்லியுள்ளவற்றை தாண்டி மணமக்கள் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு விஷயம் “வெட்டிங் போட்டோகிராபி”.

திருமணத்திற்கு முன்போ அல்லது பிறகோ சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு சென்று வித்தியாசமான தீம்களில் புகைப்படங்கள் எடுப்பதை மணமக்கள் விரும்புகின்றனர். இதனால் வெட்டிங் போட்டோகிராபி குறிப்பாக கேரள மக்கள் இடையே மிகவும் பிரபலமாகியுள்ளது.

இந்நிலையில் வெட்டிங் போட்டோகிராபி விரும்பிகளுக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது  கொச்சி மெட்ரோ நிர்வாகம். அதன்படி வெட்டிங் போட்டோகிராபி எடுக்க விரும்புபவர்கள் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு ரூ.5 ஆயிரம் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை வசதிகேற்ப பல்வேறு பேக்கேஜுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது கொச்சி மெட்ரோ.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக வரலாற்றிலேயே அதிக தொகை இதுதான்! – ஆயிரம் கோடிக்கு ஏலம் போன கார்!