Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் நேரடி பதிவு கிடையாது.. ஆன்லைனில் மட்டுமே: கேரள அமைச்சர் அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 14 அக்டோபர் 2024 (13:23 IST)
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நேரடியாக பதிவு செய்ய முடியாது என்றும், ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும் கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நடை திறப்பு காலத்தில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்து வர வேண்டும் என்றும், நேரடியாக பதிவு செய்யும் முறை இல்லை என்றும் அமைச்சர் வாசகன் தெரிவித்தார்.

நேரடி பதிவு முறையை ரத்து செய்து, இணையவழி முன்பதிவு முறையை மட்டுமே பின்பற்றினால் போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக எச்சரிக்கை விடுத்த நிலையில், அமைச்சர் வாசகன் நேரடி பதிவு முறை இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, இணைய வழியில் மட்டும் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த ஆண்டு மகர பூஜை காலத்தில் 80,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த முடிவுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இணைய வழி முன்பதிவு மற்றும் நேரடி பதிவு ஆகிய இரண்டையும் தொடங்குமாறு கேரள அரசை வலியுறுத்தி வருகின்றன.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments