Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்களுக்கு கொரோனா இலவச சிகிச்சை கிடையாது! – முதல்வர் திடீர் அறிவிப்பு!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (09:23 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு இலவச கொரோனா சிகிச்சை கிடையாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. எனினும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் வாரம் ஒருமுறை சொந்த செலவில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற்று தலைமை ஆசிரியர்களிடம் அளிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு அரசின் இலவச மருத்துவ சிகிச்சை கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments