மகாராஷ்டிரா வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அது ஒமிக்ரான் பாதிப்பா என்ற பீதி எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
முன்னதாக உத்தர பிரதேசம் வந்த 4 வெளிநாட்டு பயணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அது ஒமிக்ரான் பாதிப்பா என சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பயணிகள் 6 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் கொரோனா லேசான அறிகுறிகளுடன் தென்படுவதாகவும், அது ஒமிக்ரான் வகை பாதிப்பா என்பது குறித்து பரிசோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.