Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று ஒரேநாளில் 38,607 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் சுகாதாரத்துறை

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:47 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக சுனாமி போல் கட்டுக்கடங்காமல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தினமும் இருபதாயிரம் முப்பதாயிரம் என கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 38 ஆயிரத்து 607 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது 
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 48 பேர் பலியாகி உள்ளதாகவும் இதனை அடுத்து கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5259 என்றும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
தமிழகம் போலவே கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றால் தான் கொரோனா  வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரள மாநிலம் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments