Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால்..! 2 ஆம் எண் அறையில் அடைப்பு..!!

Senthil Velan
திங்கள், 1 ஏப்ரல் 2024 (16:31 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து, ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
 
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த மார்ச் 21-ம் தேதி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
 
அமலாக்கத்துறையின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
 
கெஜரிவாலை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அவசியமில்லை என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது. இதை அடுத்து ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவல் விதித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ALSO READ: ஆட்டுக்கறி வெட்டி வாக்கு சேகரிப்பு..! கவனத்தை ஈர்த்த தேமுதிக வேட்பாளர்..!!
 
இந்நிலையில் அரவிந்த் கெஜரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள இரண்டாம் எண் அறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments