Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேகதாது அணை விவகாரம்; தமிழகத்திற்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் கருத்து!

மேகதாது அணை விவகாரம்; தமிழகத்திற்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் கருத்து!
, திங்கள், 5 ஜூலை 2021 (10:43 IST)
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கூறி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக விவசாயத்திற்கு காவிரி நீர் இன்றியமையாதது என்றும், எனவே மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிடுமாறும் வலியுறுத்திய கடிதத்தை எடியூரப்பாவுக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசியுள்ள கர்நாடக காங்கிரஸ் ஒரு மாநிலம் தனது திட்டங்களுக்கு பிற மாநிலத்திடம் அனுமதி பெற தேவையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக முதல்வர், தமிழ்நாடு முதல்வரிடம் அனுமதி கோருவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்காகதான் தளர்வுகள்… ஆனால் கட்டுப்பாட்டுடன் இருங்கள – ஸ்டாலின் வேண்டுகோள்!