Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் விஷயத்தில் அந்தர் பல்டி அடித்த கபில் சிபல் !

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (15:38 IST)
ராகுல் காந்தியை விமர்சித்த ட்விட்டை நீக்கியுள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல்.
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி வெளியேறிய நிலையில் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸுக்கான தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து இன்று டெல்லியில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
 
அதில் காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவையென மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சோனியா காந்திக்கு கடிதம் அளித்துள்ளனர். அதை ஏற்று இனி காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிக்க முடியாது என சோனியா காந்தி அறிவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் பேசிய ராகுல்காந்தி காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களுக்கு பாஜகவுடன் தொடர்புள்ளது என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் ராகுல் காந்தி இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.
 
ராகுல்காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கபில் சிபல் ”30 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறேன். பாஜகவுடன் நான் தொடர்பில் இருப்பதாக ராகுல் காந்தி நிரூபித்தால் கட்சியை விட்டு விலக தயார்” என கூறினார். 
 
ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை, ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்துகளை நீக்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments