Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவின் முதல் பிரதமர்.. நான் சொன்னது சரிதான்: கங்கனா ரனாவத்

Siva
ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (10:48 IST)
இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் பேட்டி ஒன்றில் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் அவரை கேலி செய்து ஏராளமான மீம்ஸ் இணையதளங்களில் பதிவாகி வந்தது என்பதையும் பார்த்தோம்.

ஆனால் நடிகை கங்கனா ரனாவத் தான் சொல்வது உண்மைதான் என்று மீண்டும் ஒருமுறை கூறியிருப்பதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் இது குறித்து விளக்கம் அளித்த போது ’1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன்னை இந்தியாவின் பிரதமர் என்று அறிவித்துக் கொண்டார் என்று கங்கனா ரனாவத்  கூறி இருக்கிறார். இதனை பாஜகவினரும் ஆதரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆனால் கங்கனா ரனாவத்  தனது பேட்டியில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்று தான் கூறினார் என்று எதிர்க்கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்

எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசியலுக்கு வந்து விட்ட பிறகு வரலாற்றை நன்கு அறிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் எதையும் படிக்காமல் உளறி கொட்டினால் இப்படித்தான் சிக்க வேண்டியது இருக்கும் என்றும் நெட்டிசன் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் கங்கனா ரனாவத்  பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்பதும் அவர் தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments