Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே சதாப்தத்தில் மாநில எல்லை கடந்து வெற்றி: கெஜ்ரிவாலுக்கு கமல் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (12:46 IST)
பஞ்சாப் வெற்றிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. 5 மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் மீதமுள்ள மாநிலங்களில் பாஜகவும் வெற்றி பெற்றது. 
 
பஞ்சாப் மாநிலத்தில் கிடைத்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடினர். அங்கு முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான், முதலமைச்சர் பதவி ஏற்பு விழா ராஜ்பவனில் நடைபெறாது என்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் தான் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் கூறினார். 
 
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் குறிப்பிட வேண்டிய வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கிய ஒரே சதாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாக காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments