Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’அப்படி நடித்து’’ கலாச்சாரத்தைக் கெடுத்தவர் கமல்ஹாசன் -ஹெச்.ராஜா

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (18:24 IST)
சினிமாவில் அரைகுறை ஆடையுடன் நடித்து கலாச்சாரத்தைக் கெடுத்தவர் கமல்ஹாசன்  என ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.
நேற்று மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்தார். அன்றாடமும் அவர் ஆளும் கட்சியை விமர்சித்துவரும் நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி கமல்ஹாசனை தாக்கிப்  பேசியிருந்தார். அதில், நடிகர் அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், அதிமுக மற்றும் பாஜக கட்சியில் கமலுக்கு பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே ஆளும்கட்சியிக் முதல்வர் அமைச்சர்கள் எனப்பலரும் கமலை ரவுண்டு கட்சி விமர்சித்துவரும் நிலையில், தற்போது பாஜக முன்னாள் தேசியச் செயலாளார் ஹெச்.ராஜா, கமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஹெ.ராஜா கூறியுள்ளதாவது :

சினிமாவில் அரைகுறை ஆடையுடன் நடித்து கலாச்சாரத்தைக் கெடுத்தவர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரும் போது, ரஜினியும் அரசியலுக்கு வருவதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முதல்வர் பழனிசாமி கமல்ஹாசன் நாடாள நினைத்தால் குடும்பம் உருப்படாது எனகூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: முக்கிய அறிவிப்பு..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்.. விளக்கம் அளித்து வருவதாக தகவல்..!

குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை விழுங்கியவர் பலி: உயிர் தப்பிய கோழிக்குஞ்சு..!

கேரளாவில் போய் மருத்துவ குப்பையை கொட்டுவேன்.. நானே லாரியில் போவேன்! - அண்ணாமலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments