Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகா தேர்தலில் திடீர் திருப்பம் - மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு

கர்நாடகா தேர்தலில் திடீர் திருப்பம் - மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு
, செவ்வாய், 15 மே 2018 (15:20 IST)
கர்நாடகா தேர்தலில் திடீர் திருப்பமாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

 
கடந்த 12ம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கியது. அதில், துவக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது. ஒரு கட்டத்தில் 110க்கும் அதிமான இடத்தில் பாஜக முன்னிலை வகிக்க, அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற நிலை உருவானது. பாஜக 118, காங்கிரஸ் 58, மதசார்பற்ற ஜனதா தளம் 44 இடங்கள் என முன்னில இருந்தது. எனவே ஏறக்குறைய பாஜகவின் வெற்றி உறுதியானது. 
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக, மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அதுவும் நிபந்தனையற்ற ஆதரவை தருகிறோம் என அறிவித்துள்ளது. காங்கிரஸின் முடிவை தேவகவுடாவும் ஏற்றுக்கொண்டார். 
webdunia

 
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 112 இடங்கள் வேண்டும். தற்போதைய நிலவரப்படி, பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், காங்கிரஸ் 75 இடங்களில் வெற்றி பெற்றதோடு, 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. எனவே, 77 இடங்கள். மஜத 38 இடங்களில் வெற்றி பெற்றதோடு, 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. எனவே அந்த கட்சிக்கு 39 இடங்கள் கிடைத்துள்ளது.
 
எனவே, காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவிக்கும் போது 77+39 இணைந்து 116 இடங்கள் வருகிறது. அதோடு, வெற்றி பெற்ற 2 சுயேட்சை வேட்பாளர்களிடமும் சித்தராமய்யா தரப்பு பேசி வருகிறது. எனவே, கர்நாடகாவில் மஜத ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் உரிமை கோர்வார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இது, ஆட்சியில் அமர காத்திருந்த பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னிந்தியா நுழைவுக்கான மணியோசை: பாஜக வெற்றிக்கு ஓபிஎஸ் வாழ்த்து