Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் கனவு! – கைகோர்த்த பிரான்ஸ்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:36 IST)
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் தற்போது பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையம் இணைந்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் வல்லரசு நாடுகளுக்கு இணையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து வீரர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022ம் ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த இந்தியா முனைந்து வரும் நிலையில் 2018ல் தொடங்கப்பட்ட பணி கொரொனா காரணமாக காலதாமதமாகியுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், தேவையான உபகரணங்கள் வழங்கவும் பிரான்சின் சி.என்.இ.எஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம் பின்னாட்களில் இந்தியாவில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தை அமைக்கவும் சி.என்.இ.எஸ் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments