நிலவில் நில அதிர்வு ஏற்பட்டதா? விக்ரம் லேண்டர் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல்..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (09:34 IST)
பூமியில் அவ்வப்போது நில அதிர்வு ஏற்படும் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் சமீபத்தில் நிலவுக்கு இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவில் நில அதிர்வு ஏற்பட்டதை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நிலவில் தென் துருவத்தில் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதாகவும் நில அதிர்வை விக்ரம் லேண்டரில் உள்ள ILSA  என்னும் கருவி பதிவு செய்துள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
நில நிலவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ மையம் தகவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் நிலவில் உள்ள பல மர்மங்களை விக்ரம் லேண்டர் பூமிக்கு தகவல் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments