நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

Siva
செவ்வாய், 24 ஜூன் 2025 (16:13 IST)
லண்டனில் நடைபெற்ற 2025 இந்தியா குளோபல் ஃபாரம் மாநாட்டில், இஸ்கான் துறவி கௌரங்க தாஸ், கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையுடன் தனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான உரையாடலைப் பகிர்ந்து கொண்டார். அ
 
தானும் சுந்தர் பிச்சையும் ஐஐடியில் சமகால மாணவர்கள் என்றும், கல்லூரி நாட்களில் சந்தித்ததில்லை என்றாலும் பட்டப்படிப்பிற்கு பிறகு நாங்கள் சந்தித்தோம் என்றும் கூறினார். முதல் சந்திப்பில் சுந்தர் பிச்சை  என்னைப் பார்த்து, 'நீங்கள் என்னைவிட இளமையாக இருக்கிறீர்களே!' என்றார். அதற்கு நான், 'நீங்கள் மன அழுத்தத்தைத் தரும் டிஜிட்டலை நம்பினீர்கள், நான் மன அமைதியைத் தரும் கடவுளை நம்பினேன்’ என்று  பதிலளித்தேன்," என்று அவர் பகிர்ந்தார்.
 
ஐஐடி பம்பாயில் பி.டெக் பட்டம் பெற்ற கௌரங்க தாஸ், தனது இளமையான தோற்றத்திற்கு மன அழுத்தமற்ற வாழ்க்கை முறையே காரணம் என்றார். இந்த சிறிய சம்பவத்தை, சமூக ஊடகங்களால் ஏற்படும் பெரிய மனநல பிரச்சனைக்கு அவர் கவனத்தை திருப்பப் பயன்படுத்திக் கொண்டார்.
 
"உலக அளவில் 230 மில்லியன் மக்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகியுள்ளனர். இந்தியாவில் மட்டும் 70% இளைஞர்கள் தினமும் சுமார் ஏழு மணி நேரம் இணையத்தில் செலவிடுகிறார்கள். உலக மக்கள் தொகையில் ஏழு பேரில் ஒருவர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்," என்று கௌரங்க தாஸ் புள்ளிவிவரங்களுடன் வருத்தத்தை தெரிவித்தார்.
 
டிஜிட்டல் தளங்களால் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அவரது கவலைகள் மிகவும் நியாயமானவை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments