Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையா ? வாட்ஸ் ஆப்பில் வைரல்...

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (17:14 IST)
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி  நள்ளிரவில் ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அப்போது, பாமர மக்கள் முதற்கொண்டு அன்றாடம் பணம் புழங்கும் வங்கிகள், பெட்ரொல் பங்குகள் வரை அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டது. 
ஒரு சில மாதங்களில் , மத்திய அரசு புதிய ரூ. 500 ரூ. 1000 மற்றும் ரூ. 2000 ஆகியவை அறிமுகப்படுத்தபட்டன.  இதனால் ஓரளவு கறுப்புபணம் கட்டுப்படுத்தப்பட்டதாக பேச்சு எழுந்தது.  கூடிய விரைவிலேயே  மக்களின் சிரமமும்  மட்டுப்படுத்தப்பட்டது. 
 
இந்நிலையில்,’இந்தியாவில் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஒரு வாட்ஸ் ஆப் தகவல் பரவி வருகிறது.’
 
அதில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகள் நீக்கப்பட்ட்உ, அடுத்த வருடம் ஜனவரி 1, 2020 முதல் புதிய ரூ.1000 நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தத் தகவல்,  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு இந்தத் தகவல் கூறியுள்ளதாக வாட்ஸ் ஆப்பில் வெளியான இந்த தகவலுஇல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், மத்திய அரசின் சார்பாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதுபோன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments