Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீட் கிடைக்குமா? கிடைக்காதா? உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஐ.ஆர்.சி.டி.சி-யின் புதிய வசதி

Advertiesment
சீட் கிடைக்குமா? கிடைக்காதா? உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஐ.ஆர்.சி.டி.சி-யின் புதிய வசதி
, செவ்வாய், 29 மே 2018 (19:22 IST)
இணையதளத்தில் ரயில்களில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் உறுதியாக கிடைக்குமா என்பதை உடனே தெரிந்து கொள்ள ரயில்வே அமைச்சகம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

 
ஐ.ஆர்.சி.டி.சி.யில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது பெரும்பாலும் வெயிட்டிங் லிஸ்ட்டில்தான் இருக்கும். அப்போது நமக்கு டிக்கெட் உறுதியாக கிடைக்குமா? கிடைக்காதா? என்ர சந்தேகம் இருக்கும். ரயில் புறப்படும் அன்றுதான் பெரும்பாலும் தெரியவரும்.
 
இது பயணிகளுக்கு பெரும் சிரமாம இருந்து வருகிறது. இனி அந்த பிரச்சனை இருக்காது. முன்பதிவு செய்யும் போதே டிக்கெட்டுகள் உறுதியாக கிடைக்குமா என்பதை இணையதளமே யூகித்து சொல்லிவிடும். 
 
இந்த புதிய வசதி குறித்து ரயில்வே அதிகாரி கூறியதாவது:-
 
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இணையதளச் சேவையின் மூலம் காத்திருப்பு பட்டியலில் உள்ள தங்களது டிக்கெட் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை பயணிகள் உடனே தெரிந்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த புதிய வசதி நேற்று நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் இந்த அமித் ஷா? இந்த விஷயத்தில் தலையிடுவது தவறானது: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு