Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்காக ஐபிஎஸ் பதவியில் இருந்து விலகிய 'தமிழக' சிங்கம்!

Webdunia
புதன், 29 மே 2019 (09:35 IST)
அரசியலில் நுழைந்து சேவை செய்வதற்காக ஐபிஎஸ் பதவியில் இருந்து விலகி தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிரடி முடிவை எடுத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
'சிங்கம்' சூர்யா பாணியில் சமூக விரோதிகளின் கொட்டத்தை அடக்கியவர் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. கரூரை சொந்த ஊராக கொண்ட இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் காவல்துறை துணை ஆணையராக பதவி வகித்து வந்தார். சமூக விரோதிகள், ரெளடிகளின் கொட்டத்தை அடக்கியதால் அந்த பகுதியின் ஹீரோவாக போற்றப்பட்டார். பலர் இவரை சிங்கம் சூர்யாவுக்கு ஒப்பிட்டனர். 
 
இந்த நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்த அண்ணாமலை, ராஜினாமா கடிதத்தை கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் அளித்துள்ளார். முடிவை பரிசீலனை செய்யுமாறு முதல்வர் கூறியும் அண்ணாமலை மறுத்துவிட்டதாக தெரிகிறது.
 
தனது ராஜினாமா குறித்து விளக்கமளித்துள்ள அண்ணாமலை, 'சமீபத்தில் மானசரோவர் யாத்திரை சென்றபோது தனது வாழ்வில் திருப்பம் ஏற்பட்டதாகவும், மேலும் தன்னுடன் பணியாற்றிய ஒருவரின் மறைவு தன்னை மனதளவில் மிகவும் பாதித்துள்ளதாகவும், தீர ஆராய்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், சில காலம் குடும்பத்துடன் இருந்துவிட்டு பின்னர் சமூக சேவை, அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
பெங்களூரு பார்ப்பன அக்ராஹர சிறை முறைகேடுகளை கண்டுபிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபா, அண்ணாமலையின் இந்த முடிவுக்கு தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

சென்னை வந்த விமானம் மீது விழுந்த லேசர் லைட்.. நிலைகுலைந்த விமானி.. அதிர்ச்சி தகவல்..!

வெள்ளத்தால் கரைந்த மொத்த உப்பு.. ஒரு கிலோ ரூ.145க்கு விற்பனை.. அண்டை நாட்டுக்கு கைகொடுத்த இந்தியா..!

இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தான் இல்லையாம்! எந்த நாடு தெரியுமா? - அமெரிக்க புலனாய்வு அமைப்பு ரிப்போர்ட்!

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments