Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலம்பிய தினகரன், ஆறுதல் சொன்ன சசிகலா - பெங்களூர் சிறையில் திடீர் சந்திப்பு !

Webdunia
புதன், 29 மே 2019 (09:30 IST)
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நேற்று முதல்முறையாக சசிகலாவை பெங்களூர் சிறையில் வைத்து தினகரன் சந்தித்துள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுக, தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் பேரிடியாக விழுந்துள்ளது. தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. முகவர்களின் வாக்குகள் கூடவா எங்களுக்கு விழவில்லை என டிடிவி தேர்தல் ஆணையத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனாலும் தொண்டர்கள் சோர்வடையக் கூடாது என்பதற்காக அரசியலில் ஒரே நாளில் எதையும் சாதித்து விட முடியாது. எங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த தேர்தல் முடிவுகளை அறிந்த சசிகலா அப்செட்டில் இருப்பதால் இதுவரை அவரை சென்று தினகரன் பார்க்காமல் இருந்தால். இந்நிலையில் நேற்று அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜெயா டிவி இயக்குனர் விவேக் ஆகியோருடன் சென்று சந்தித்துள்ளார்.

அப்போது மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளார் தினகரன். ’ இந்த தேர்தல் முடிவு நமது உண்மையான பலம் இல்லை. நம்மை வேண்டுமென்றெ பழிவாங்கியிருக்கிறார்கள். நமது பூத் ஏஜெண்டுகளின் வாக்குகள் கூட நமக்கு விழவில்லை..’ எனப் புலம்பியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் சசிகலா தனியாக தினகரனிடம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments