Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கதேசத்திலிருந்து நாடு திரும்பும் இந்தியர்கள்.! லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு..!!

Randhir Jaiswal

Senthil Velan

, வியாழன், 25 ஜூலை 2024 (18:52 IST)
வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.  
 
வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலவரம் வெடித்து, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அங்கு படித்து வந்த இந்திய மாணவ, மாணவிகளை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டு வருகிறது. 

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 -க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக தெரிவித்தார். 

எல்லையை கடந்து வருவதாக இருந்தாலும் சரி, விமான நிலையம் சென்று விமானத்தின் மூலமாக வருவதாக இருந்தாலும் சரி இந்தியர்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான நடவடிக்கைகளை வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் சிறப்பாக மேற்கொண்டது என்று அவர் கூறினார்.


நமது நட்பு நாடான வங்கதேசத்தில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது என ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஞ்சோலை விவகாரம்.! விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு.!!