சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில் உலக அளவில் இதுவரை, 19, 20,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,453289 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 119686 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாலில் , இதுவரை 10,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1036 பேர் குணமடைந்துள்ள நிலையில், 339 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் 1,211 பேர் கொரோனாவால் பாதிப்பு; ஒரே நாளில் 117 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்க தாமதம் செய்ததால் இந்தியாவுக்கு மிகவும் பின்னடைவு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்க தாமதம் செய்ததால் இந்தியாவுக்கு மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் 10 லட்சம் பேரை பரிசோதனை செய்ய 149 பரிசோதனைக் கருவிகளே இருக்கின்றன என அவர் விமர்சித்துள்ளார்.