Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்ஃபி மரணத்தில் முதலிடம் பிடித்த இந்தியா

செல்ஃபி மரணத்தில் முதலிடம் பிடித்த இந்தியா
, வெள்ளி, 6 அக்டோபர் 2017 (20:23 IST)
செல்ஃபியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து உலகளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.


 

 
மொபைல் போன் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்மார்ட்போன்களில் செல்ஃபி வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து எல்லோரிடமும் செல்ஃபி மோகம் தொற்றிக்கொண்டது. பின் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் செல்ஃபியை வைத்து மொபைல் போன்களுக்கு விளம்பரம் செய்ய தொடங்கிவிட்டனர். 
 
இந்நிலையில் பெரும்பாலானோர் செல்ஃபி மோகத்தில் எங்கு சென்றாலும் எதை செய்தாலும், யாரை சந்தித்தாலும் செல்ஃபி எடுப்பதை வழக்கமான பழக்கமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
 
இளைஞர்கள் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்றுக்கொண்டு ரயில் முன்னே செல்ஃபி எடுக்க முயற்சித்து உயிரிழந்து வருகின்றனர். மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் சிலர் மலை உச்சியில் நின்றுக்கொண்டு செல்ஃபி எடுத்து உயிரிழந்து வருகின்றனர்.
 
செல்ஃபியால் உயிரிழப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா செல்ஃபியால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் இடமாக உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது.
 
செல்ஃபியால் உயிரிழந்தவர்களில் 68% பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 75% பேர் ஆண்கள் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகள் வரிசையாக உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விற்பனையில் களைக்கட்டும் பென்ஸ் காரின் LWB மாடல்