Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1,500 ஐ கடந்தது ஒமிக்ரான் பாதிப்பு! – தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பு!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (09:40 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறி வருவதாக கூறப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 23 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 1,525 ஆக பதிவாகியுள்ளன. இதில் 560 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவிலான ஒமிக்ரான் பாதிப்பில் 460 பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. டெல்லியில் 351 பாதிப்புகளும், குஜராத்தில் 136 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இதுவரை 117 பாதிப்புகளும், கேரளாவில் 109 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments