Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிமூச்சுவரை இந்தியா; என் அஸ்தியும் இங்குதான் கரைக்கப்படும் : சோனியா காந்தி

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (10:40 IST)
என்னுடைய இறுதி மூச்சுவரை இந்தியாவில்தான் வசிப்பேன், என் அஸ்தி இங்குதன் கரைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.


 

 
கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, சோனியா காந்தி நேற்று திருவனந்தபுரத்தில், காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
 
அவர் கூறும்போது “நான் இத்தாலியில் பிறந்தவள் என்பது உண்மைதான். 1968ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் மருமகளாக இந்தியாவிற்கு வந்தேன். கடந்த 48 ஆண்டுகளாக என் இந்தியாவில்தான் வசிக்கிறேன். ஆனால், என்னுடைய பிறப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் என்னை விமர்சனம் செய்து வருகின்றன.
 
கவுரமான குடும்பத்தில்தான் பிறந்தேன். இத்தாலியில் என் உறவினர்கள் இருக்கிறார்கள். என்னுடைய இரண்டு சகோதரிகள் மற்றும் 93 வயது தாயும் வசிக்கிறார்கள்.
 
ஆனால் இந்தியாதான் என் தாயகம். இதுதான் என் நாடு. இறுதி மூச்சுவரை நான் இந்தியாவில்தான் இருப்பேன். என்னுடைய மறைவுக்குப்பின் என் அஸ்தியும் இங்குதான் கரைக்கப்படும்.
 
எனக்கு கெட்டப்பெயரை உண்டாக்கும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அதற்காக ஏராளமான கட்டுகதைகளையும் பொய்களையும் அவர் கூறி வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம்” என்று அவர் பேசினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments