Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன்மோகன் சிங், சோனியா, மற்றும் ராகுல் காந்தி கைது

Advertiesment
மன்மோகன் சிங்
, வெள்ளி, 6 மே 2016 (15:00 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
 

 
பாஜக ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தியது, உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது உள்ளிட்டவற்றை கண்டித்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என்ற பெயரில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தியது.
 
இந்த பேரணியை தொடங்குவதற்கு முன்பு தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கட்சித் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்க உள்ளிட்டோர் தொண்டர்களிடையே உரையாற்றினர்.
 
அப்போது மத்திய அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதைத்தொடர்ந்து திரளான தொண்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி அவர்கள் பேரணியாக புறப்பட்டனர்.
 
நாடாளுமன்றத்தை சுற்றி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அப்பகுதியில் நுழைந்த சோனியா ராகுல் மற்றும் மன்மோகன் சிங்கை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா கொடுக்கும் செல்போனை டயல் செய்தால் ‘அம்மா..அம்மா’ என்று கேட்கும் : விஜயகாந்த்