Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் இருந்து இனி தொலைக்காட்சி இறக்குமதி கிடையாது: மத்திய அரசு அதிரடி

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (20:17 IST)
சீனாவிலிருந்து தொலைக்காட்சி இறக்குமதிக்கு இந்தியா திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னால் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே லடாக்கில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
 
இந்த சம்பவத்திற்கு பின்னர் சீனாவுடனான உறவை துண்டித்துக்கொள்ள இந்தியா முடிவு செய்தது. முதல் கட்டமாக சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்தது. இதில் டிக்டாக், ஹலோ உள்பட பல முக்கிய செயலிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்திய ரயில்வேயில் சீன நிறுவனங்கள் பெற்ற ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. இவ்வாறு படிப்படியாக சீனாவுக்கு எதிராக செக் வைத்து கொண்டிருக்கும் இந்திய அரசு தற்போது சீனாவில் இருந்து வண்ணத் தொலைக் காட்சியை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய கட்டுப்பாடு விதித்துள்ளது
 
இந்த கட்டுப்பாட்டால் இனி சீன நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதில் சிக்கல் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments